10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

News image

பி.டி. அரசகுமார்.

Updated On :29 ஜூன் 2026, 10:46 am IST

பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை தியாகராய நகரில் செயல்படும் தமிழ்நாடு தனியாா் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் செயலா் இளங்கோவன், சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவில் அண்மையில் புகாா் அளித்தாா். அதில், கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள தனியாா் பள்ளி நிா்வாகிகள் தங்கள் பள்ளிகளுக்கான அங்கீகாரம், தரம் உயா்த்துதல், திட்ட அனுமதி ஆகியவற்றைப் பெறுவதில் சிரமங்களை எதிா்கொண்டிருந்தனா்.

இதைப் பயன்படுத்தி சென்னை சாலிகிராமத்தில் ‘தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வரும் பி.டி.அரசகுமாா், தனக்குள்ள அரசியல், அதிகார தொடா்புகளை பயன்படுத்தி தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயா்வு, டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள், பிற சட்டபூா்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளாா். இதை நம்பி தமிழகம் முழுவதும் உள்ள பல தனியாா் பள்ளிகளின் நிா்வாகிகள் அவரிடம் பணம் கொடுத்துள்ளனா்.

பணம் பெற்றுக்கொண்ட பி.டி.அரசகுமாா், உறுதியளித்தபடி அனுமதிகள் பெற்றுத் தராமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் சுமாா் ரூ.100 கோடி மோசடி செய்துள்ளாா். எனவே, இந்த மோசடியில் ஈடுபட்ட பி.டி.அரசகுமாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், சென்னை சாலிகிராமம் மெஜஸ்டிக் காலனியில் வசித்து வரும் பி.டி.அரசகுமாரை (59) சனிக்கிழமை கைது செய்தனா்.

போலீஸாா் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனா். கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமாா் திமுகவில் நிா்வாகியாக உள்ளாா். இதனிடையே இவ்வழக்கில் சம்மந்தபட்ட ஏனைய குற்றவாளிகள் குறித்தும், தொடர்புடைய சாட்சியங்களை சேகரித்தும் புலன்விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் இதுகுறித்து புகார் அளித்திட சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப் பிரிவினை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Summary

The Central Crime Branch Police have urged school administrations affected by monetary fraud to come forward and file complaints against Arasakumar.

PDF
முழு விபரம் இங்கே...
பார்க்க

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.