ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ரூ. 100 கோடி மோசடி! தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!

பள்ளிகள் அனுமதிக்கு ரூ. 100 கோடி மோசடியில் ஈடுபட்ட தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image

தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி. அரசகுமார்.

Updated On :27 ஜூன் 2026, 9:17 pm IST

பள்ளிகள் அனுமதிக்கு ரூ. 100 கோடி மோசடியில் ஈடுபட்ட தனியார் பள்ளிகள் சங்கத்தலைவர் பி.டி.அரசகுமார் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சங்கத்தின் செயலர் இளங்கோவன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்கள் பள்ளிகளுக்கான அங்கீகாரம், தரம் உயர்த்துதல் மற்றும் திட்ட அனுமதி ஆகியவற்றைப் பெறுவதில் சிரமங்களை எதிர் கொண்டிருந்தது.

சென்னை சாலிகிராமத்தில் 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வரும் அரசகுமார் தனக்குள்ள அரசியல் மற்றும் அதிகார தொடர்புகளைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்வு, DTCP / CMDA அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

அவர் உறுதியளித்தபடி, அனுமதிகள் பெற்றுத் தராமலும், பணத்தை திரும்பத் தராமலும் சுமார் ரூ. 100 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்து ஏமாற்றிய அரசகுமார் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுத்த புகாரின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜின் உத்தரவின்பேரில், அரசகுமாரை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணைக்குப் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபரான அரசகுமார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

Summary

Arasakumar, the president of a private schools association, was arrested on Saturday for his involvement in a ₹100-crore fraud related to school approvals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.