FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை: செந்தில் பாலாஜி கடிதம்!

திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையருக்கு செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. கடிதம் அனுப்பியுள்ளார்.

News image

செந்தில் பாலாஜி.

Updated On :15 ஜூலை 2026, 8:52 am IST

தமிழகத்தில் த.வெ.க ஆட்சியை கவிழ்க்க அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்களிடம் தி.மு.க நிர்வாகிகள் பேரம் பேசியாத த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் இதுவரை 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கின் பின்னணியில் கோவை தெற்கு எம்.எல்.ஏ. செம்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்குமாரும் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி திருவல்லிக்கேணி நீதிமன்றம் ஏற்கனவே சமன் அனுப்பியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்ற இருவரும், நீதிமன்ற உத்தரவை மீறி 5 நாள்களைக் கடந்தும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. 

இந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து இந்த வழக்கு தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், “காவல்துறையினர் பதிவு செய்துள்ள வழக்கில் எனது பெயரோ, எனது சகோதரர் அசோக்குமாரின் பெயரோ முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை. வழக்கில் பெயரே இல்லாத போது எங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது ஏன்? எனவே, சட்ட நடைமுறைகளின்படி எனக்கு 35 க்ளாஸ் (3) பிஎன்எஸ் பிரிவின் கீழ் முறையான நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும்.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்போது பழிவாங்கும் நோக்கில் என்னை வேறு எந்த வழக்கிலும் கைது செய்யக்கூடாது என உறுதியளிக்கவேண்டும்.

நான் ஒரு மக்கள் பிரதிநிதி மட்டுமல்ல. தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபர். சட்டத்திற்குப் பயந்து நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நான் கையெழுத்திடவோ விசாரணைக்கோ ஆஜராகையில், எனக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கரூரில் 41 பேர் பலியான விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா உள்பட அமைச்சர்கள் சிலர் என்னைச் சம்பந்தப்படுத்தி மிரட்டும் தொனியில் பேசி வருகின்றனர். மேலும், அந்த விவகாரம் தொடர்பாக எனது ஆதரவாளர்களைக் கைது செய்தும் வருகின்றனர்” என்றும் தெரிவித்துள்ளார்.

Summary

MLA Senthil Balaji has sent a letter to the Deputy Commissioner of Police, Triplicane.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.