விசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

மகள் திருமண நிச்சயதார்த்த விழாவில் குத்தாட்டம் போட்ட கதிர் ஆனந்த்!

யம்மாடி ஆத்தாடி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கதிர் ஆனந்தின் வைரல் விடியோ.

News image

கதிர் ஆனந்த் நடனமாடிய விடியோ காட்சி. - படம்: தினமணி

Updated On :15 ஜூலை 2026, 8:33 pm IST

வேலூர் திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த், தன்னுடைய மகள் திருமண நிச்சயதார்த்த விழாவில் குத்தாட்டம் போட்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடி கிங்ஸ்டன் தனியார் பொறியியல் கல்லூரியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்தின் மகள் செந்தாமரைக்கு திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.

இந்த விழாவில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

திருமண நிச்சயதார்த்த விழா முடிந்தவுடன் திமுக கட்சியினருடன் சேர்ந்து கதிர் ஆனந்த் மற்றும் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் சிம்பு நடித்த வல்லவன் படத்தில் இடம்பெற்ற 'யம்மாடி ஆத்தாடி' என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

உறவினர்களும், அவர்களுடன் இணைந்து நடனமாடிய இந்த விடியோ, இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Summary

A video of Vellore DMK Lok Sabha MP Kathir Anand dancing energetically at his daughter's engagement ceremony is going viral on the internet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.