தமிழ்நாடு முழுவதும் நகராட்சி நிர்வாகத்துறையின் 50 குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்து முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, முந்தைய ஆட்சிக் காலத்தில் விடப்பட்ட டெண்டர்கள் குறித்து துறை வாரியாக விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நகராட்சி நிர்வாகத்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில், ஏற்கெனவே முறைக்கேடு புகார்கள் எழுப்பப்பட்ட சென்னை மாநகராட்சியின் பல்வேறு டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, போக்குவரத்து துறையின் பல்வேறு டெண்டர்களும் சமீபத்தில் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க ஒன்று முதல் நான்கு நாள் வரை மட்டுமே குறுகிய கால அவகாசம் அளிக்கப்பட்டு, பல்வேறு டெண்டர்கள் விதிகளை மீறி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, குறுகிய கால ஒப்பந்தங்கள் வெளியிடப்பட்டது குறித்து அதிகாரிகளிடம் தமிழ்நாடு அரசு விளக்கம் கேட்டிருந்தது.
இந்தச் சூழலில் மாநிலம் முழுவதும் பல்வேறு நகராட்சியின் கீழ் விடப்பட்ட 50 குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்து முதல்வர் விஜய் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார்.
அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சியின் 30 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், கோத்தகிரி, செங்கம், பெரம்பலூர், திருவள்ளூர், மணப்பாறை, திருவையாறு உள்ளிட்ட நகராட்சிகளில் 20 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதில், கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, குடிநீர் இணைப்பு பணி, வாரச் சந்தை கடைகள், புதிய போர்வெல் அமைக்கும் பணி உள்ளிட்ட டெண்டர்கள் அடங்கும்.
இதனிடையே, நேற்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில், சென்னை திருவான்மியூர் - உத்தண்டி இடையே நான்கு வழித்தட உயா்நிலை சாலை அமைக்கப்படும் திட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Summary
50 tenders cancelled across Tamil Nadu - Chief Minister Vijay takes action
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூலை 17 - நேரலை
தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதி

முதல்வர் விஜய் உத்தரவு! சென்னை மாநகராட்சியில் 35 டெண்டர்கள் ரத்து!

100 -க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து!
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |




