ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

சென்னையில் நேற்று போல் இன்றும் மழை பெய்யுமா?

சென்னையில் நேற்று போல் இன்றும் மழை பெய்யுமா என்பது பற்றி..

News image

சென்னையில் மழை - file photo

Updated On :18 ஜூலை 2026, 10:10 am IST

சென்னையில் கடும் வெய்யில் வாட்டி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பரவலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால், கொதித்துக் கொண்டிருந்த சென்னை மாநகரம் சற்று குளிர்ச்சியடைந்துள்ளது.

சென்னை மட்டுமல்லாமல், சென்னையை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் பேதம் பார்க்காமல் மேகம் மழையைக் கொட்டியது. பரவலாக சில இடங்களில் சிறிது நேரமும், பல இடங்களில் அரை மணி நேரத்துக்கும் மேலாக, மழை பெய்தது.

கடந்த சில நாள்களாக வெப்பம் 40 டிகிரி செல்சியஸை எட்டி விடுமோ என்று அச்சத்தில் இருந்த மக்களுக்கு நேற்று பெய்த மழையால் ஓரளவுக்கு நிம்மதி ஏற்பட்டது.

சனிக்கிழமை காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இன்றும் மழை பெய்யுமா என்று சென்னை மக்கள் ஆவலோடு வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்வது என்னவென்றால், ஒரு சில நாள்களுக்கு மாலையில் மழை பெய்யும் என்ற மகிழ்ச்சியான செய்தியைத்தான். இன்றும் சென்னையில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை மாலை அல்லது இரவில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், மழைப்பொழிவு அவசியமாகிறது என்றும், தற்போது பெய்த மழையால், ஓரளவுக்கு ஏரிகளுக்கு நீர்வரத்துக் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Summary

Will it rain in Chennai today, just like yesterday?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.