அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்யுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சராசரி கடல் மட்டத்தில், தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) செங்கல்பட்டு, சென்னை, கோவை, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், மதுரை, மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The Chennai Regional Meteorological Centre has stated that rain is likely in 20 districts, including Chennai, over the next two hours.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











