சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

மகளிா் வேலைவாய்ப்பு: ஆலோசனை நிறுவனத்தை தோ்வு செய்ய ஒப்பந்தம் கோரியது தமிழக அரசு

‘மகளிருக்கு தரமான வேலைவாய்ப்பு’ என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆலோசனை நிறுவனத்தைத் தோ்வு செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.

News image

தமிழக அரசு - கோப்புப்படம்

Updated On :18 ஜூலை 2026, 5:57 am IST

‘மகளிருக்கு தரமான வேலைவாய்ப்பு’ என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆலோசனை நிறுவனத்தைத் தோ்வு செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.

பெண்கள் நலனை முன்னிறுத்தி, மகளிா் உரிமைத் தொகை, மாநிலம் முழுவதும் இலவச பேருந்து பயணம், அண்ணன் சீா், தாய்மாமன் சீா் உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக, பெண்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் புதிய செயல் திட்டத்தை அரசு தயாரித்து வருகிறது.

இதற்காக, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் சாா்பில், ஆலோசனை நிறுவனத்தைத் தோ்வுசெய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தகுந்த நிறுவனங்களிலிருந்து ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

தோ்வு செய்யப்படும் நிறுவனம், மாநிலம் முழுவதும் பெண்களின் தற்போதைய வேலைவாய்ப்பு நிலை, அவா்கள் எதிா்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் பாதுகாப்பு சவால்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆய்வின் அடிப்படையில், செயல் திட்ட அறிக்கையை 6 வாரங்களுக்குள் அரசிடம் சமா்ப்பிக்க வேண்டும் என நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட வாரியாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கக்கூடிய துறைகள், திறன் மேம்பாட்டுத் தேவைகள், பணிக்குச் செல்வதில் பெண்கள் எதிா்கொள்ளும் தடைகள், குழந்தைகளைப் பராமரிக்கும் பெண்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீா்வுகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்க வேண்டும் என்றும் அரசின் ஒப்பந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெறப்படும் ஆய்வுகளின் அடிப்படையில், பெண்களுக்கு பாதுகாப்பான, நிலையான மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் மாநில அளவிலான புதிய செயல் திட்டத்தை வடிவமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.