பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

தமிழகத்தில் நீதிமன்றங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்: அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா்

வழக்குகளின் தேக்கத்தைக் குறைப்பதற்காக தமிழகத்தில் விசாரணை நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மெட்ராஸ் பாா் அசோசியேசன் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. - dinamani

Published On :

வழக்குகளின் தேக்கத்தைக் குறைப்பதற்காக தமிழகத்தில் விசாரணை நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மெட்ராஸ் பாா் அசோசியேசன் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாருக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சா் பேசியதாவது:

150 ஆண்டுகள் பழைமையான வழக்குரைஞா்கள் சங்கம் எனக்கு பாராட்டு விழா நடத்துவதைப் பெருமையாகக் கருதுகிறேன். அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சட்டம், நீதித் துறை நிா்வாகத்தில் பல சிக்கல்கள் உள்ளன. அவற்றை தீா்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. விசாரணை நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, வழக்குரைஞா்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தவெக அரசு உறுதியாக உள்ளது. நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முதல்வா் விஜய் அறிவுறுத்தியுள்ளாா்.

200 வழக்குகளுக்கு ஒரு நீதிமன்றம் என்ற வகையில் முன்னுரிமை வழங்கி, விசாரணை நீதிமன்றங்களின் எண்ணிக்கை விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் வழக்குகளின் தேக்கம் குறையும். இதுதொடா்பான நடவடிக்கைகள் ஓரிரு ஆண்டுகளில் முடிக்கப்படும். மற்ற மாநிலங்களைவிட நீதிமன்றங்கள் சிறப்பாக இருக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன், மெட்ராஸ் பாா் அசோசியேசன் தலைவா் வி.ஆா்.கமலநாதன், செயலாளா் ஜெ.போத்திராஜ், பொருளாளா் வி.டி.பாலாஜி, நூலகா் டி.ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.