ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் என்பது ரசிகனாக எனது ஆசை: அமைச்சர் வினோத்

முதல்வர் விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் என்பது ரசிகனாக எனது ஆசை என அமைச்சர் வினோத் பேசியிருப்பது குறித்து...

News image

திரைப்பட இயக்குநரும் அமைச்சருமான வினோத் - டிஎன்எஸ்

Updated On :23 ஜூலை 2026, 11:04 am IST

தஞ்சாவூர்: தமிழக முதல்வர் விஜய் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது ஒரு ரசிகனாக எனது ஆசை என்றும், ஒரு சமானிய மனிதராக பார்த்த நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என திரைப்பட இயக்குநரும் அமைச்சருமான வினோத் தெரிவித்துள்ளார்.

நடிகரும் - தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் நடித்து வெளியாகும் அவரது 69 ஆவது திரைப்படமான ஜன நாயகன். ஆறு மாத கால போராட்டத்திற்கு பிறகு இன்று வெளியானதை ஒட்டி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

இயக்குர் எச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவான ஜன நாயகன் திரைப்படம் பல்வேறு பிரச்னைகளைக் கடந்து இன்று (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியானது.

தமிழகத்தில் காலை முதல் காட்சி 9 மணிக்கு வெளியான நிலையில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஜன நாயகன் படம் இன்று வெளியானதை ஒட்டி காலை முதல் அவரது தொண்டர்கள் உற்சாக கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன் வேளாண்துறை அமைச்சர் கேக் - வெட்டி கொண்டாடிய பின்னர் படம் பார்த்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், ஒரு ரசிகனாக பார்த்த முதல்வர் விஜய் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை, ஒரு சமானிய மனிதராக பார்த்த நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என அவர் தெரிவித்தார்.

Summary

It is my wish as a fan that Chief Minister Vijay should act again: Minister Vinoth

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.