FOLLOW US

ON GOOGLE DISCOVER

தொடரும் அமளி! நாடாளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடிகிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

காஞ்சியில் களைகட்டிய ஜன நாயகன் வெளியீடு: ரசிகர்களுக்கு அசைவ பிரியாணி!

காஞ்சிபுரத்தில் களைகட்டிய ஜன நாயகன் பட வெளியீட்டை ரசிகர்கள் கொண்டாடியது குறித்து...

News image

காஞ்சியில் களைகட்டிய ஜன நாயகன் வெளியீடு - டிஎன்எஸ்

Updated On :23 ஜூலை 2026, 10:33 am IST

நடிகரும் - தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் நடித்து வெளியாகும் அவரது 69 ஆவது திரைப்படமான ஜன நாயகன். ஆறு மாத கால போராட்டத்திற்கு பிறகு இன்று வெளியானதை ஒட்டி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

இயக்குர் எச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவான ஜன நாயகன் திரைப்படம் பல்வேறு பிரச்னைகளைக் கடந்து இன்று (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியானது.

தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அதிகாலை 4.30 மணிக்கே ஜன நாயகன் திரையிடப்பட்டது.

தமிழகத்தில் காலை முதல் காட்சி 9 மணிக்கு வெளியான நிலையில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி, காஞ்சிபுரம் பாபு திரையரங்கம் முன்பு ஜன நாயகன் படத்தை ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினர். விஜய்யின் படத்திற்கு பாலாபிஷேகம் செய்தும், கற்பூர தீபம் காண்பித்தும், டிஜே இசைக்கு நடனமாடி கொண்டாடி வருகின்றனர். விஜய்யின் பாடலை பாடவிட்டு ஆடிப் பாடி மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் கூடியதால் காஞ்சிபுரம் மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.

முதல்வர் நடித்த திரைப்படம் வெளியாவதை ஒட்டி திரையரங்கம் அருகே போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆபத்தை உணராமல் இளைஞர் ஒருவர் பட்டாசை கையில் பிடித்து மேலே எரிந்து வருகிறார்.

திரைப்படம் காண வந்த ரசிகர்களுக்கு அசைவ பிரியாணி வழங்கப்படவுள்ளது.

ஜன நாயகன் படம் சாதனை படைக்க வேண்டும் என்றும் ஆனால் எங்கள் தளபதியின் கடைசி படம் இது என்பது எங்களுக்கு மிகுந்த கவலையாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

Summary

'Jana nayagan' launch event in Kanchi sees enthusiastic turnout

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.