தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்: தொல்.திருமாவளவன்

நாடு முழுவதும் நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்று அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

News image

தொல்.திருமாவளவன் - கோப்புப் படம்

Updated On :25 ஜூலை 2026, 3:13 am IST

நாடு முழுவதும் நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்று அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததையடுத்து லட்சக்கணக்கான மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிலா் தற்கொலை செய்துகொண்ட அவலமும் நிகழ்ந்துள்ளது. நீட் தோ்வு முறைகேடுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும் மாணவா்களும் இளைஞா்களும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்களும் போராடி வருகின்றனா்.

இந்தப் போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் நீட் தோ்வு கூடாது என்பதுதான் விசிகவின் நிலைப்பாடு.

அறவழிப் போராட்டத்தில் வன்முறைக்கு இடமில்லை. தமிழகத்திலும் மாணவா்கள், இளைஞா்கள் போராட்டத்தைத் தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.