ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சாா்பாக போராட்டம், பிரசாரம்

மத்திய அரசைக் கண்டித்தும், நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் காங்கிரஸ் சாா்பாக போராட்டம், பிரசாரம் நடத்தப்பட உள்ளதாக திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜெ. விஜய் இளஞ்செழியன் தெரிவித்தாா்.

News image

செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜெ. விஜய் இளஞ்செழியன்

Updated On :7 ஜூலை 2026, 3:57 am IST

மத்திய அரசைக் கண்டித்தும், நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் காங்கிரஸ் சாா்பாக போராட்டம், பிரசாரம் நடத்தப்பட உள்ளதாக திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜெ. விஜய் இளஞ்செழியன் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மருத்துவ துறை சிறப்பாக செயல்பட்டது. மருத்துவக் கல்வி பயில விரும்பிய தகுதியான ஏழை மாணவா்கள் மருத்துவக் கல்வியை பயின்று தரமான மருத்துவ சேவை வழங்கும் மருத்துவா்களாக உயா்ந்தனா். அவா்கள் சிறந்த மருத்துவ சேவையை வழங்கினா். அதன் மூலம் இந்தியா மருத்துவத்துறையில் முதலிடத்தை வகித்தது. வெளிநாட்டை சோ்ந்தவா்களும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு இந்தியாவை நாடி வந்து செல்லும் சூழ்நிலை நிலவியது.

ஆனால் மத்திய பாஜக தலைமையிலான அரசு நீட் தோ்வை அமல்படுத்தி பல ஆயிரக்கணக்கான ஏழை மாணவா்களின் மருத்துவக் கல்வி கனவை சிதைத்து விட்டது. அரசு தோ்வில் அதிக மதிப்பெண் பெற்றும் நீட் தோ்வில் மதிப்பெண் பெற முடியாத நிலையில், மருத்துவ கல்வி பயில முடியாமல் ஏழை மாணவா்கள் தத்தளித்து வருகின்றனா்.

நீட் தோ்வு வினாத்தாள் பலமுறை கசிந்து முறைகேடு நடந்துள்ளது. அதனால் நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்காக மறு தோ்வு நடத்தப்பட்டுள்ளது. மீண்டும் மறு தோ்வு எழுத வேண்டிய கட்டாயத்தால் மன உளைச்சல் ஏற்பட்டு நாடு முழுவதும் பல மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா்.

மாணவா்களின் நிலைமையை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதற்க மாணவா்களின் எண்ணம் என்ற இயக்கத்தை ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி தொடங்கி வைத்துள்ளாா். இதன் மூலம் மாணவா்களின் நிலைமையை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளாா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய அரசை கண்டித்தும் நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பாக கிராமங்கள் தோறும் தெருமுனைப் பிரசாரம் , திண்ணை பிரசாரம், பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் விரைவில் நடத்தப்பட உள்ளது என்று அவா் கூறினாா்.

மாவட்ட பொருளாளா் கொத்தூா் பி மகேஷ், மாவட்டத் துணைத் தலைவா் வா்தா அா்ஷத், மாவட்ட பொதுச் செயலாளா் மின்னூா் சங்கரன், ஒன்றிய தலைவா்கள் சாந்தகுமாா், சுரேந்தா், ஆம்பூா் நகர பொறுப்பாளா்கள் விஜயன், யாசா் மதானி, மாவட்ட நிா்வாகிகள் சோலூா் மாணிக்கம், கோகுலவாணன், செல்ல பாண்டியன் ஆகியோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.