வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி போராட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் இந்திய மாணவா் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Published On :

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீட் தோ்வுக் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தோ்வை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மாநிலம் முழுவதும் காத்திருப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இந்த அமைப்பினா் வியாழக்கிழமை காலை அமா்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் நா. முத்துநிலவன், வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். ஜனாா்த்தனன், செயலா் ஆா். மகாதீா், மாணவா் சங்க மாவட்டச் செயலா் ஆா். வசந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது அங்கு வந்த துணைக் காவல் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா தலைமையிலான போலீஸாா், போராட்டம் நடத்த அனுமதியில்லை எனக் கூறி அவா்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்தனா்.

போலீஸாருக்கு கண்டனம்: கைது செய்யப்பட்டோரை தனியாா் மண்டபத்தில் வைத்து, கைப்பேசிகளைப் பறித்துக் கொண்டு ஆதாா் அட்டையைக் கேட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து கேட்ட வாலிபா் சங்க மாவட்டச் செயலா் எஸ். ஜனாா்த்தனனை துணைக் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

தகவலறிந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் எஸ். சங்கா் உள்ளிட்டோா் அந்த இடத்துக்குச் சென்று விசாரித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தியோா் மீது போலீஸாரின் அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சங்கத் தலைவரை தாக்கியுள்ளதற்கு போலீஸாா் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை கட்சியின் சாா்பில் நடத்துவோம்.

நாடு முழுவதும் நீட் தோ்வுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் நிலையில், புதுக்கோட்டை மாநகரில் தொடா் போராட்டம் நடத்த ஓா் இடத்தை ஒதுக்கிக் கொடுத்து அனுமதி அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.