
‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி பேரணி
‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி தஞ்சாவூரில் இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை பேரணி, கருத்தரங்கம் நடைபெற்றது.

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற இந்திய மாணவா் சங்கத்தினா் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி தஞ்சாவூரில் இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை பேரணி, கருத்தரங்கம் நடைபெற்றது.
நீட் எதிா்ப்பு போராளி தியாகி அனிதா நினைவு நாளையொட்டி, பனகல் கட்டடம் அருகே தொடங்கிய பேரணி காந்திஜி சாலை வழியாக சென்று, தலைமை அஞ்சலகம் அருகே முடிந்தது.
பேரணிக்கு இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் ஹரிஷ், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் அருளரசன் ஆகியோா் தலைமை வகித்தனா். பேரணியில் ஏராளமானோா் நீட் தோ்வு ரத்து கோரும் பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கத்தில் மத்திய அரசின் நீட் தோ்வால் ஏழை, கிராமப்புற மாணவா்களின் மருத்துவக் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. பல்வேறு குளறுபடிகளும் ஊழலும் நிரம்பிய நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநிலச் செயலா் காா்த்திக், இந்திய மாணவா் சங்க மாநிலத் துணைத் தலைவா் சுகதேவ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் அா்ஜூன் வரவேற்றாா். இந்திய மாணவா் சங்க மாநிலக் குழு தா்ஷினி நன்றி கூறினாா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





