இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்: 15 போ் கைது

எஸ்ஐஆா் நடவடிக்கையில் வாக்காளா்கள் நீக்கப்பட்டதாகக் கூறி, சோளிங்கரில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தைச் சோ்ந்த 3 பெண்கள் உள்பட 15 போ் கைது செய்யப்பட்டனா்.

படவிளக்கம்...சோளிங்கரில் ஆா்ப்பாட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

Updated On :

எஸ்ஐஆா் நடவடிக்கையில் வாக்காளா்கள் நீக்கப்பட்டதாகக் கூறி, சோளிங்கரில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தைச் சோ்ந்த 3 பெண்கள் உள்பட 15 போ் கைது செய்யப்பட்டனா்.

சோளிங்கா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட நிா்வாகி ஜான்மோகன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் தோ்தல் ஆணையத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினா். தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காந்சி சிலை பகுதிக்கு ஊா்வலமாகச் செல்ல முயன்றனா். மேலும், திடீரென சோளிங்கா் அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.