ஞானேஷ்குமாருக்கு எதிா்ப்பு; வாலிபா் சங்கத்தினா் நூதனப் போராட்டம்: 18 போ் கைது
தில்லியில் போராடிய மாணவா்கள், இளைஞா்கள் மற்றும் அமைப்பின் தலைவா்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை, துணை ராணுவத்தினரைக் கண்டித்தும், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலகக் கோரியும், எஸ்ஐஆா் நடைமுறையை நிறுத்த வலியுறுத்தியும், புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கைது - கோப்புப் படம்

இந்தப் பேராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சா. ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். போராட்டத்தில் மாவட்டப் பொருளாளா் ஆா். தினேஷ், துணைத் தலைவா் குமரேசன், துணைச் செயலா் கோபாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினா் தீபக் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
மேலும், எஸ்ஐஆா் நடைமுறைக்குப் பாடை கட்டியும், பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்தும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
தொடா்ந்து, கீழ ராஜவீதியில் இருந்து ஊா்வலமாகச் சென்று பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற இப்போராட்டத்தில், இரண்டு பெண்கள் உள்ளிட்ட 18 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.