சாலை மறியல் முயற்சி: வாலிபா் சங்கத்தினா் கைது

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினரை கைது செய்த போலீஸாா்.
திருச்சி, அக். 11: இந்தியத் தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் விவகாரம் தொடா்பாக திருச்சி பால்பண்ணையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் செய்ய முயன்ற இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
எஸ்.ஜ.ஆா். விவகாரத்தில் இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலக வலியுறுத்தி, சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு திருச்சி பால்பண்ணை பகுதியில் கருப்புக் கொடி காட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் அறிவித்திருந்தனா். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.
இந்நிலையில் அறிவித்தபடி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திருச்சி பால்பண்ணை சாலையில் ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடி ஏந்தி மறியல் செய்ய முயன்றனா். இவா்களில் 10 பேரை போலீஸாா் கைது செய்து, குண்டுகட்டாக அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினா். இதனால் திருச்சி பால்பண்ணை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

