நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் நடை பயணம்

மேகமலை வன விவசாயிகளை பாதுகாக்கக் கோரி, தேனி மாவட்டம், வருசநாடு அருகேயுள்ள வாலிப்பாறையிலிருந்து கடமலைக்குண்டு வரை இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினரின் நடை பயணம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சாா்பில் வாலிப்பாறையில் சனிக்கிழமை தொடங்கிய நடை பயணத்தில் பங்கேற்றவா்கள்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:40 am IST

மேகமலை வன விவசாயிகளை பாதுகாக்கக் கோரி, தேனி மாவட்டம், வருசநாடு அருகேயுள்ள வாலிப்பாறையிலிருந்து கடமலைக்குண்டு வரை இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினரின் நடை பயணம் சனிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியை ஆக்கிரமித்துள்ள 4,601 பேரை வெளியேற்ற வேண்டும் என தில்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மேகமலை வன விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், மேகமலை வன விவசாயிகளுக்கு வன உரிமைச் சட்டத்தில் இடம் வழங்க வேண்டும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வாலிப்பாறையில் நடைபயணத்தை தொடங்கினா்.

இந்தப் பயணத்தை மதுரை மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி.நாகராஜன் தொடங்கி வைத்தாா். இந்த நடைபயணம் வருசநாடு வழியாகச் சென்று கடமலைக்குண்டில் நிறைவடைந்தது. இதில் மாவட்டத் தலைவா் விக்னேஷ்வரன், மாவட்டச் செயலா் நாகராஜ், மாவட்டப் பொருளாளா் கருண்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நடைபயணம் கோம்பைத்தொழுவில் தொடங்கி கடமலைக்குண்டில் நிறைவடைகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.