/

தூத்துக்குடி காவல் மரணம்! அருணாச்சலம் உடல் குடும்பத்திடம் ஒப்படைப்பு!

தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது பற்றி...

News image

அருணாச்சலம் - x

Updated On :24 ஜூலை 2026, 10:39 am IST

தூத்துக்குடியில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது உயிரிழந்த இளைஞர் அருணாச்சலத்தின் உடல் உடற்கூராய்வுக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாக கைது செய்யப்பட்ட அருணாச்சலம் என்ற 24 வயது இளைஞர், காவல்துறை விசாரணையின் போது உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த 7 நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்த அருணாச்சலம் நேற்று உயிரிழந்தார். காவல்துறை தாக்கியதால்தான் அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் அரசு மருத்துவமனையில் நேரில் விசாரணை நடத்திய பிறகு, சிறப்பு மருத்துவர்கள் தலைமையில் அருணாச்சலத்தின் உடல் இன்று காலை உடற்கூராய்வு செய்யப்பட்டது.

சுமார் 2 மணிநேரம் செய்யப்பட்ட உடற்கூராய்வு விடியோவாகப் பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அருணாச்சலத்தின் குடும்பத்திடம் நீதிபதி உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து உடலைப் பெற்றுக் கொள்ள அருணாச்சலத்தின் குடும்பத்தினர்

Summary

Thoothukudi Custodial Death! Arunachalam's Body Handed Over to Family!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.