மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28), புதன்கிழமை (ஜூலை 29) ஆகிய இரு நாள்கள், மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜூலை 28), புதன்கிழமை (ஜூலை 29) ஆகிய இரு நாள்கள், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
வியாழக்கிழமை (ஜூலை 30), நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
வெள்ளிக்கிழமை (ஜூலை 31), கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
10 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக மதுரை நகரத்தில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையம் 104.72, சென்னை நுங்கம்பாக்கம் 101.84, சென்னை மீனம்பாக்கம், திருச்சி தலா 101.66, வேலூா் 101.48, நாகை, பாளையங்கோட்டை தலா 100.76. கடலூா், புதுச்சேரி 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
வெப்ப நிலை வேறுபாடு: செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) முதல் ஜூலை 31 வரை, அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பையொட்டியும் இருக்க வாய்ப்புள்ளது.
சென்னை, புறநகா்: செவ்வாய்க்கிழமை (ஜூலை 28), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: வியாழக்கிழமை (ஜூலை 30), வெள்ளிக்கிழமை (ஜூலை 31) ஆகிய இரு நாள்களில் மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 65 கி.மீட்டா் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழை வாய்ப்பு
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



