மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டினால், தமிழகத்தில் குறிப்பாக விவசாயிகள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாவர் என தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும், மேக்கேதாட்டு அணையைக் கண்டிப்பாகக் கட்டப்படும் என கர்நாடக அரசு திட்டவட்டமாகக் கூறி வருகிறது.
இந்த நிலையில், மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய்யின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 31) ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார், தலைமைச் செயலாளர், துறைகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
மேலும், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் உள்பட அமைச்சர்களும் ஆக. 3-ல் கர்நாடகம் செல்லவுள்ளனர்.
Summary
Mekedatu Dam Issue: Consultative Meeting Today Chaired by the CM Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை; தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதல்வர்: உதயநிதி குற்றச்சாட்டு

மேக்கேதாட்டு அணை பிரச்னை: முதல்வர் விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - மு.க. ஸ்டாலின்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!

முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்! | TVK
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



