திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும். ‘நீட்’ தேர்வையும், முன்னேறிய சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென ஜூலை 30 முதல் ஆக. 2 வரை மத்திய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் இளைஞரணி, மாணவர் அணி, மற்றும் மகளிர் பாசறை ஆகியவற்றின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர்.
உரிய முறைப்படி முன்கூட்டியே விண்ணப்பித்திருந்தும் அதற்குக் காவல்துறை அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையைப் பறிக்கும் சனநாயக விரோத நடவடிக்கை ஆகும்.
நீட் தேர்வு வேண்டாமென்பதுதான் தவெக அரசின் கொள்கை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு வலுசேர்க்கக்கூடிய திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பது வியப்பளிக்கிறது.
திராவிடர் கழகத்தின் இந்தப் பரப்புரைக்கு அனுமதி வழங்குமாறு தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார
Summary
VCK Chief Thol. Thirumavalavan requests the CM Vijay for permission for the Dravidar Kazhagam's campaign
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு நடந்துகொள்வது சரியல்ல! - தி.க. பிரசார அனுமதி மறுப்புக்கு சிபிஎம் கண்டனம்!

திராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!
துணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
துணை முதல்வராக திருமாவளவன்? விசிக வலியுறுத்தல்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி




