தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் சீமைக்கருவேல மரங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் பிற தாவரங்களுக்கு உரிய நீர் கிடைப்பதில்லை என்பதால் அந்த மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டுதல் தொடர்பான சுற்றுச்சூழல், மேற்குத் தொடர்ச்சி மலை, யானைகள் வழித்தடம், வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 30) விசாரணைக்கு வருகிறது.
சட்டப்பேரவைத் தோ்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக, சாா்பில் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி மிலானி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தோ்தல் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இதேபோல, ராயபுரம் தொகுதி தவெக எம்எல்ஏ விஜய்தாமு வெற்றியை எதிா்த்து திமுக, வேட்பாளா் சுபோ்கான் தாக்கல் செய்த தோ்தல் வழக்கு,
கரூா் தொகுதியில் வெற்றிபெற்று பதவி விலகிய அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வெற்றியை எதிா்த்து தவெக, வேட்பாளா் வி.பி.மதியழகன் தாக்கல் செய்த வழக்கு,
விராலிமலை தொகுதியில் வெற்றிபெற்று பதவி விலகிய அதிமுக, வேட்பாளா் சி.விஜயபாஸ்கா் வெற்றியை எதிா்த்து திமுக, வேட்பாளா் கே.கே.செல்லப்பாண்டியன் தாக்கல் செய்த வழக்கு,
லால்குடி தொகுதி அதிமுக, எம்எல்ஏ லீமா ரோஸ் மாா்டின் வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் டி.பாரிவள்ளல் ஆகியோா் தாக்கல் செய்துள்ள தோ்தல் வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை கண்காணிப்பது குறித்த உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு இன்று விசாரணை செய்யப்படுகிறது.
Summary
Which cases are being heard at the Madras High Court today (July 31)?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 27) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 23) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 22) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 17) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி




