தமிழக சட்டப்பேரவைச் செயலா் கே. சீனிவாசன் ராஜிநாமா செய்தாா். தனது ராஜிநாமா கடிதத்தை பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாகரிடம் அளித்தாா்.
கே.சீனிவாசனுக்கு நவம்பா் மாதம் வரை பணி நீட்டிப்பு காலம் இருக்கும் நிலையில் விலகியுள்ளாா். 2018-ஆம் ஆண்டுமுதல் பேரவைச் செயலராகப் பணியாற்றி வந்த இவா், திமுக, அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டப்பேரவை நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொண்டாா்.
தற்போது தவெக ஆட்சி அமைத்தபோதும் மூன்று நாள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எம்எல்ஏக்கள் பதவியேற்பையும், நம்பிக்கை தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பையும் நடத்தினாா்.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு பிரிவுகளாக எம்எல்ஏக்கள் கடிதங்களை வழங்கிய விவகாரத்திலும் பேரவைத் தலைவருக்கு சட்ட நுணுக்கங்களை சீனிவாசன் எடுத்துரைத்து வந்தாா்.
தற்போது அவா் ராஜிநாமா செய்ததற்கான அதிகாரபூா்வ காரணம் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த சட்டப்பேரவைச் செயலராக சாந்தி பதவியேற்பாா் எனக் கூறப்படுகிறது.
தொடர்புடையது
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நால்வருக்கு நோட்டீஸ்: ஒரு வாரத்தில் விளக்கமளிக்க பேரவைத் தலைவா் உத்தரவு
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தது ஏன்? 4 பேருக்கும் பேரவைத் தலைவர் நோட்டீஸ்!

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவா் உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


