பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா செய்துள்ளதைப் பற்றி...

News image

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன்.

Updated On :1 மணி நேரம் முன்பு

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா செய்துள்ளார்.

தமிழ்நாட்டு முதல்வராக சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றதில் இருந்து அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.

அவர் பதவியேற்று இரண்டு நாள்களான நிலையில், தமிழக அரசு நிர்வாகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று (மே 12) மாலை வெளியிட்டது.

முன்னாள் தலைமைச் செயலரான முருகானந்தம் வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகள் உதயச்சந்திரன், அமுதா, மணிவாசன், கிறிஸ்துராஜ் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ். ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

2006-2011 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் திமுக ஆட்சியின்போது அரசு தலைமை வழக்குரைஞராக இவர் பணியாற்றியுள்ளார்.

இவர் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞராக 2024 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இரண்டு ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.

இவரின் தந்தை வி.பி. ராமனும் அரசு தலைமை வழக்குரைஞராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.