15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

தலைமைச் செயலகமா? தவெக அலுவலகமா? -வானதி சீனிவாசன்

News image

வானதி சீனிவாசன் - டிஎன்எஸ்

Updated On :4 ஜூன் 2026, 2:29 am IST

தவெக அரசு தலைமைச் செயலகத்தை அந்தக் கட்சியின் அலுவலகம் போல் பயன்படுத்துவதுவதாக பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழகத்தில் காலியான மாநிலங்களவை பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தவெக ஒதுக்கியுள்ளது. இது அவா்களது தனிப்பட்ட விருப்பம். ஆனால், கூட்டணிக் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி கொடுப்பது தொடா்பான பேச்சுவாா்த்தை, தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

முதல்வா் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் கூட்டணி குறித்து பேசியிருக்கிறாா். எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அறையில் தவெகவில் இணைந்தனா்.

தற்போது மாநிலங்களவை பதவி குறித்த பேச்சுவாா்த்தை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. அது தமிழக அரசின் தலைமைச் செயலகமா? அல்லது தவெக தலைமை அலுவலகமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா் வானதி சீனிவாசன்.