மாநிலங்களவையில் தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி என காங்கிரஸ் வேட்பாளர் பிரவீண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் மாநிலங்களவை எம்.பி. சி.வி. சண்முகம் எம்.எல்.ஏ தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனால், தமிழ்நாட்டில் ஒரு இடம் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு சார்பில் மாநிலங்களவையில் காலியாக உள்ள இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி நேற்று (ஜூன் 4) அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, வேட்பாளர் பிரவீண் சக்ரவர்த்தி இன்று கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சித் தலைவர்களைச் சந்தித்தார்.
இதுதொடர்பாக பிரவீண் சக்ரவர்த்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “முதல்வர் விஜய்யின் தலைமையிலும், ப. சிதம்பரம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எஸ்.எஸ். பாலாஜி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் ஏ.எம். ஷாஜஹான் ஆகியோரின் முன்னிலையிலும், மாநிலங்களவையில் தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்பிற்காக இன்று எனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தேன்.
அதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் தலைவர்களை அவர்களது அலுவலகங்களில் சந்தித்து இணக்கமான முறையில் கலந்துரையாடினேன் இவ்வாய்ப்பினை வழங்கிய காங்கிரஸ் கட்சித் தலைமைக்கும், ஒத்துழைத்த எல்லா தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
Congress candidate Praveen Chakravarty has expressed his gratitude for the proud opportunity to serve as the voice of the Tamil people in the Rajya Sabha.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக கூட்டணியில் இல்லை! பிரவீண் சக்ரவர்த்தி பதிவுக்கு இந்திய கம்யூ. பதில்!
தவெக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டா? பிரவீண் சக்ரவர்த்திக்கு பெ. சண்முகம் கண்டனம்!
தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் முதல் எம்.பி.: பிரவீண் சக்ரவர்த்தி






