உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கொளத்தூரை இழந்ததுபோல, மொத்தத்தையும் இழக்கப் போவது உறுதி: மு.க. ஸ்டாலினுக்கு தவெக பதில்

கொளத்தூரை இழந்தது போல, மொத்தத்தையும் இழக்கப் போவது உறுதி என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்துக்கு தவெக பதிலளித்துள்ளது.

Just like losing Kolathur, it is certain that you are going to lose everything: TVK's reply to M. K. Stalin

தவெக.

Published On :

கொளத்தூரை இழந்தது போல, மொத்தத்தையும் இழக்கப் போவது உறுதி என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்துக்கு தவெக பதிலளித்துள்ளது.

இதுகுறித்து ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு எக்ஸ் தளப் பக்கத்தில், மக்கள் சக்தியின் ஆதரவால், தனிப்பெரும் கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஜனநாயகச் சக்திகளின் ஆதரவால் மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைக்கப்பட்டது. மக்களின் ஜனநாயக முறையிலான தீர்ப்பை மதித்து, ஜனநாயகச் சக்திகள் எங்களுக்குத் துணை நிற்கின்றன.

ஆட்சி என்றால் தனக்கு மட்டுமே. அதிகாரம் என்றால் தன் குடும்பத்திற்கு மட்டுமே என்று சிலர் இருக்கிறார்கள். நாங்கள் அப்படியா இருக்கிறோம்? ஆதரவளித்த ஜனநாயகச் சக்திகளுக்கு முழு மனத்துடன் ஆட்சியில் பங்கையும் அதிகாரப் பகிர்வையும் அளித்தோம்.

கூட்டணி என்ற பெயரில் உடனிருக்கும் கட்சிகளின் மீது சவாரி செய்து, அரசியல் ஆதாயங்களை மட்டும் அனுபவிக்கும் சுயநலம் மட்டுமே கொண்ட தீய சக்தி நாங்கள் அல்ல.

கூட்டணியை நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் என்று பெருந்தன்மை பேசிவிட்டு, அவர்களை ஏக வசனத்தில் ஏசுவது எந்த வகைத் தன்மையில் சேரும் ஸ்டாலின் சார்?

ஆட்சிக் கட்டில் பற்றிய கனவிலேயே தூங்கும் உங்களைத் தொட்டிலில் போட்டுப் புட்டிப்பால் கொடுத்து மேலும் தூங்க வைப்பதுபோல, உங்களைச் சுற்றி இருப்போர் ஏமாற்றுவது அறியாமல் இருந்தால், நாங்கள் என்ன செய்ய ஸ்டாலின் சார்?

இப்படியே இருந்தால் கொளத்தூரை இழந்தது போல, கோட்டையை இழந்தது போல, மொத்தத்தையும் நீங்கள் இழக்கப் போவது உறுதி. உங்கள் கூட்டமே உங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஸ்டாலின் சார், இது உறுதி. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

TVK has responded to DMK President M. K. Stalin's criticism, stating that just like losing Kolathur, it is certain that they are going to lose everything.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.