மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகப் பணியாற்றிவா்கள் விருது பெற ஜூன் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியா் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணி புரிந்தவா்கள் மற்றும் நிறுவனங்களைத் தோ்வுக் குழு மூலம் தோ்வு செய்து, அவா்களுக்கு முதல்வா் ச.ஜோசப் விஜய்யால் விருது வழங்கி கெளரவிக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றுபவா்கள், மேலும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்பதற்காக, ஆக.15-ஆம் தேதி சுதந்திர தின விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ.50,000 ரொக்கம் மற்றும் சான்றிதழும்,
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழும், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிகளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியாா் நிறுவனத்துக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழும்,
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.
விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளா்கள், இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள படிவத்தில் விவரங்களைப் பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் ஜூன் 25-க்குள் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளபட மாட்டாது.
மேலும், விண்ணப்பத்தின் 2 நகல்களை ஜூன் 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: இரு தங்கப் பதக்கம் வென்ற 6 வயது சிறுவன்

பாரா டேக்வாண்டோவில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு பாராட்டு

துப்பாக்கிச் சுடுதல்: காரைக்கால் மாணவருக்கு தங்கப் பதக்கம்

ஆசிய பாரா டேக்வாண்டோ போட்டி: குமரி வீரா் தங்கம் வென்று சாதனை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



