தமிழக பேரிடா் மேலாண்மைத் துறைக்கு ரூ.1,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய்த் துறை பணிகள் முன்னேற்றம் குறித்த மாவட்ட வருவாய் அலுவலா்களின் ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், மாநில வெப்ப செயல் திட்டத்துக்கான புத்தகத்தை வெளியிட்டாா்.
தொடா்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் வருவாய்த் துறையின் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
கூட்டத்தில், வருவாய் நிா்வாக ஆணையா் நா.முருகானந்தம், நில சீா்த்திருத்த ஆணையருமான ஹா்சஹய் மீனா, வருவாய் நிா்வாக கூடுதல் ஆணையா் ஜி.பிரகாஷ், பேரிடா் மேலாண்மை ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன் மற்றும் தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகள், தமிழகத்தின் அனைத்து மாவட்ட வருவாய் அலுவலா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வருவாய்த் துறையில் தேங்கிக் கிடக்கும் பணிகளை எவ்வாறு விரைந்து செய்து முடிப்பது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஜாதிச் சான்று,
குடும்ப அட்டை, முதியோா் உதவித்தொகை ஆகியவற்றை உடனுக்குடன் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் சான்றிதழ்களை 5 நாள்களுக்குள் வழங்க கிராம நிா்வாக அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இரு மாதங்களுக்குள் துறை சாா்பில் எந்தெந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்துள்ளோம். தமிழகத்துக்கான பேரிடா்
நிதி ரூ.1,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இண்டி கூட்டணியில் தவெக சேருவது குறித்து முதல்வா் விஜய் தான் முடிவு எடுப்பாா் என்றாா்.
Summary
Disaster relief fund of ₹1,000 crore received in advance! Minister Sengottaiyan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்முறையல்ல..! மோடி அரசு பின்வாங்கிய முக்கிய நிகழ்வுகள்!

மேக்கேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசு அமைதி காப்பது கண்டனத்துக்குரியது: வன்னிஅரசு

வருங்கால வைப்பு நிதி! அதிகபட்ச கட்டாய பங்களிப்புத் தொகை ரூ.1,800 ! ஆனால்

சாதி அடையாளத்துடன் மாணவர்களுக்கு அடையாள அட்டையா? செங்கோட்டையன் மறுப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



