தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

தமிழகத்தில் மின்வெட்டு ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

தமிழகத்தில் மின்வெட்டு குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்...

News image

அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார். - கோப்புப்படம்

Updated On :9 ஜூன் 2026, 1:22 pm IST

தமிழகத்தில் சில இடங்களில் வேண்டுமென்றே சிலர் மின்தடையை ஏற்படுத்துவதாகவும் மின்வெட்டு புகார் வந்தவுடன் உடனடியாக சரிசெய்யப்படுவதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மின்வெட்டு குறித்த புகார்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சென்னையிலேயே பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மின்வெட்டு குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பதிலளிக்கையில்,

"மின்வெட்டு ஏற்படும் இடங்களில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்கெங்கு மின்தடை ஏற்படுகிறதோ அங்கெல்லாம் சரிசெய்யப்பட்டு சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பெரம்பூரில் மின்வெட்டு ஏற்பட்டவுடன் 40 நிமிடத்தில் சரிசெய்யப்பட்டு விட்டாலும், சிலரின் தூண்டுதலின்பேரில் போராட்டம் நடந்தது. மின்வெட்டு ஏற்பட்டவுடன் தெருவில் சென்று நிற்கச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். இதேபோல அரும்பாக்கத்திலும் ஏற்பட்ட மின்வெட்டு உடனடியாக சரிசெய்யப்பட்டது. திட்டமிட்டு விரும்பத்தகாத செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். பியூஸ் பிடுங்குவோர் சிலரை சிசிடிவி அடிப்படையில் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மின்னகம் மூலமாக புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இரவு நேரங்களில் கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மின் விநியோகம் தொடர்பான குறைகளைப் போக்க குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. திட்டமிட்டு மின் தடையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், சந்தேகத்திற்குரிய நபர்களைத் தெரிவிக்க வேண்டும்" என்று கூறினார்.

Summary

Why are there power cuts in Tamil Nadu, Minister Nirmal Kumar explains

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.