30 நாள்கள்தான் இந்த அரசு இருக்கும் என எந்த தைரியத்தில் ஸ்டாலின் சொன்னார்? மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்ததாவது:
மாநில அரசு நிர்வாகத்தில் உள்ள துறைகளை ஆய்வு செய்ய ஆளுநருக்கு அனுமதி கிடையாது. வரும் காலங்களில், துறை அமைச்சர்கள் அனுமதி இல்லாமல், அதிகாரிகள் ஆளுநருடன் ஆய்வுக்குச் செல்லக்கூடாது.
ஆய்வு செய்வதற்கான அதிகாரம், ஆளுநருக்கு இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில், அரசு இயந்திரங்களின் செயல்பாடுகளில், ஆளுநர் தலையிடுவதற்கு அதிகாரம் கிடையாது . மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபர், அவரது அதிகாரம் ராஜ்பவனில் மட்டும்தான், மற்றபடி எங்கும் தலையிடுவதற்கான அதிகாரம் இல்லை.
உதயநிதி தூண்டுதலின் பேரில்தான் அனைத்து குதிரை பேரமும் நடைபெறுகிறது. ஆதாரத்துடன் இன்று பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
குதிரை பேரத்தின் மூலம் எங்களுடைய எம்எல்ஏக்களை பர்சேஸ் பண்ண முயன்றது ஸ்டாலினும், அவருடைய உத்தரவின் பேரில் செந்தில் பாலாஜி சார்ந்த நபர்களும்தான். இன்னும் பலர் அதுபோன்ற வேலைகளை செய்து வருகிறார்கள்.
30 நாள்கள்தான் இந்த அரசு இருக்கும் என எந்த தைரியத்தில் ஸ்டாலின் சொன்னார். ஸ்டாலின் 40 நாள்களில் மக்களின் நன்மதிப்பை பெற்று மாபெரும் தலைவராகிவிட்டாரா? ஐந்து ஆண்டு முதல்வராக இருந்த கொளத்தூர் தொகுதியிலே வெல்ல முடியவில்லை; 5 ஆண்டு உங்கள் மீது இருந்த நன்மதிப்பைதான் கொளத்தூர் தொகுதியில் காட்டிவிட்டார்கள்.
எங்கள் எம்எல்ஏக்களை பர்சேஸ் பண்ணுவதை வைத்துதான் நீங்கள் 40 நாள்கள் என சொன்னீர்களா?
50 கோடிக்கு பேரம் பேசுவதை மனதில் வைத்துக்கொண்டு, அந்த தைரியத்தில் மட்டும்தான் சொன்னார், அது நிச்சயமாக நடைபெறாது. எங்களுடைய எம்எல்ஏ கிட்டத்தில்கூட நெருங்க முடியாது; நெருங்கினால் ஆதாரப்பூர்வமாக மாட்டுவார்கள்.
நாங்கள் எந்த குதிரை பேரத்திலும் ஈடுபடவும் மாட்டோம், அதற்கான தேவையும் இல்லை. எப்போதும் நாங்கள் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். மக்கள் 100 சதவீதம் எங்களோடு இருக்கிறார்கள்.
ஸ்டாலினும் எடப்பாடியும்தான் குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள், அது ஒரு காலத்திலும் நடக்காது.
Summary
On what basis did Stalin claim that this government would last only 30 days? Electricity Minister Nirmal Kumar has raised this question.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்

மின் துறையில் இந்த ஆண்டு 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல்குமார்

சென்னை பரந்தூரில் 2வது விமான நிலையம்? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் நிர்மல்குமார்
தமிழகத்தில் மின்வெட்டு ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




