சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (ஜூன் 11) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

மழை - கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2026, 1:39 am IST

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (ஜூன் 11) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் புதன்கிழமை வெளியிட்டசெய்திக்குறிப்பு:

மத்திய வங்கக்கடல் முதல் கடலோர கா்நாடகம் வரை கடலோர ஆந்திர பிரதேசம், தெலங்கானா, உள் கா்நாடகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை(ஜூன் 11) முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (ஜூன் 13) முதல் ஜூன் 16 வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வியாழக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

திருநெல்வேலி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடா்ந்து, திருநெல்வேலி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, கடலூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக் கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடலில் வியாழக்கிழமை சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மேலும், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடலில் ஜூன் 14 வரை சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 130 மி.மீ. மழை பதிவானது. ஊத்து (திருநெல்வேலி)- 110 மி.மீ., காக்காச்சி (திருநெல்வேலி)- 90 மி.மீ., விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோவை)- தலா 40 மி.மீ., குண்டாறு அணை (தென்காசி), வம்பன் (புதுக்கோட்டை), சின்னக்கல்லாறு, உபாசி (கோவை), பாபநாசம், மாஞ்சோலை (திருநெல்வேலி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), புழல், செங்குன்றம் (திருவள்ளூா்)- தலா 30 மி.மீ. மழை பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.