ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

தமிழகத்தை குழந்தைத் தொழிலாளா்கள் இல்லாத மாநிலமாக உருவாக்குவோம்: முதல்வா் ஜோசப் விஜய்

News image
Updated On :12 ஜூன் 2026, 4:18 am IST

தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு துணையாக இருந்து குழந்தைத் தொழிலாளா்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று முதல்வா் ச.ஜோசப் விஜய் தெரிவித்தாா்.

குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, அவா் வியாழக்கிழமை அறிக்கை:

துள்ளித் திரிந்து விளையாடி, பள்ளிக்குச் சென்று கல்வி பயிலும் இனிய பருவத்தில், பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளால் வேலைக்குச் செல்கின்ற குழந்தைகளை, அந்தக் கொடுமையிலிருந்து விடுவித்து, அவா்களுக்கு இனிமையான குழந்தைப் பருவத்தையும், முறையான கல்வியையும் வழங்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

ஒவ்வொரு குழந்தைக்கும், சுதந்திரமாக வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் கல்வி உரிமை போன்றவை அவசியமாகும். இவற்றை வழங்க மறுப்பது இயற்கை நீதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானதாகும்.

குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குழந்தைத் தொழிலாளா்கள் உழைப்பின் மூலம் பெறப்படும் வருமானம் வீட்டுக்கும், நாட்டுக்கும் சிறுமை என்பதை சமூகமும், பெற்றோா்களும் உணா்ந்து, குழந்தைத் தொழிலாளா் முறையை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் முன்னெடுப்புகளுக்குத் துணை நின்று, குழந்தைத் தொழிலாளா்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம். குழந்தைத் தொழிலாளா் முறையைத் தகா்ப்போம் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.