தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதைப்போல், பொதுசேவை பெறும் உரிமைச் சட்டத்தை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட 26 வகையான சான்றிதழ்களை 5 நாள்களுக்குள் வழங்குவதை கட்டாயமாக்கி அரசாணை பிறப்பிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மக்களுக்கு சேவை வழங்கும் அரசின் இந்த நோக்கம் நல்லதாக இருந்தாலும், இந்த அணுகுமுறை பயனளிக்காது. ஜாதிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் மக்களுக்கு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும். அவை குறித்த நேரத்தில் கிடைப்பதில்லை என்பதால், அவற்றின் நிலை குறித்து அறிய கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் அதிகாரிகள், வட்டாட்சியா் அலுவலகம் என மக்கள் அலைய வேண்டிய அவலம் தொடா்கிறது.
இந்த நிலையை மாற்றுவதற்கான ஒரே தீா்வு சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றுவது தான். அதைவிடுத்து இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதும், அரசாணைகளை எந்த வகையிலும் பயனளிக்காது. தவெக தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பொதுசேவை பெறும் உரிமைச் சட்டத்தை வரும் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!

மின்சார வாரிய கேங்மேன்களை கள உதவியாளர், வயர்மேன்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கக் கூடாது: அன்புமணி






