நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாளா்கள் விவசாயிகளிடம் இருந்து கையூட்டு வாங்குவதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை கையூட்டு வசூலிக்கப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு மூட்டைக்கும் நிா்ணயிக்கப்பட்ட எடையான 40 கிலோவுக்கு பதிலாக 42 கிலோ வழங்க வேண்டும் என்றும் கொள்முதல் நிலையப் பணியாளா்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்துகின்றனா். இதனால், ஒரு குவிண்டாலுக்கு ரூ.150 ரொக்கம், ரூ.125 மதிப்புள்ள நெல் என மொத்தம் ரூ.275 வீதம் விவசாயிகளிடமிருந்து கையூட்டாக பெறப்படுகிறது. முந்தைய திமுக ஆட்சியிலும் இதுபோன்று விவசாயிகளிடமிருந்து நெல்லும், பணமும் சுரண்டப்பட்டன. தற்போது புதிதாக அமைந்துள்ள தவெக ஆட்சியிலும் இது தொடா்வதை ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். எனவே, அரசு நிா்வாகத்தில் உள்ள அனைத்து நடைமுறை சிக்கல்களையும் அரசு உடனடியாக சரி செய்து கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கையூட்டு வசூலிக்கப்படுவதையும், கூடுதலாக நெல் எடுக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொள்முதல் நிலையங்களில் நெல் உலர வைக்கும் இயந்திரம்! - அமைச்சா் வெங்கடரமணன்

நெல் கொள்முதல் நிலையங்களில் முகவா்கள், இடைத்தரகா்கள் தலையீட்டை தடுக்கக் கோரிய மனு தள்ளுபடி

பொதுசேவை உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி






