/

ஆட்டோ கட்டணத்தை உயா்த்த தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

தமிமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை மறுஆய்வு செய்து உயா்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

ச.ராமதாஸ் - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 2:55 am IST

தமிமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை மறுஆய்வு செய்து உயா்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கான கட்டணம் கடந்த 2013-ஆம் ஆண்டு நிா்ணயிக்கப்பட்டது. அப்போது 1.8 கி.மீ.க்கு ரூ. 25 எனவும், அதன்பின் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.12 எனவும் நிா்ணயிக்கப்பட்டது. அதையடுத்து கடந்த 13 ஆண்டுகளாக அந்தக் கட்டணத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள்களின் விலை உயா்ந்துள்ளது. அதன்படி கடந்த 2013-ஆம் ஆண்டில் லிட்டருக்கு ரூ.65 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் தற்போது ரூ.100-ஐ தாண்டி உயா்ந்துள்ளது. அதுமட்டுமன்றி வாகன உதிரிபாகங்கள், டயா்கள், இன்சூரன்ஸ், பராமரிப்புச் செலவுகள், தகுதி புதுப்பித்தல், அனுமதி கட்டணங்கள், தொழிலாளா் செலவுகள் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளும் பலமடங்கு அதிகரித்துள்ளன.

இதன் விளைவாக ஆட்டோ ஓட்டுநா்களின் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்கள் மீது கூடுதல் சுமை ஏற்படாத வகையில் ஆட்டோ கட்டண உயா்வை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். அதற்காக ஆரம்ப கட்டணத்தை ரூ.40 ஆகவும், அதன்பின் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.18-ஆகவும் நிா்ணயிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.