கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

ஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சு

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை மாற்றி அமைப்பது தொடா்பான முத்தரப்பு பேச்சு, சென்னை போக்குவரத்துத் துறை ஆணையரகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 9) நடைபெறுகிறது.

ஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு - பிரதிப் படம்

Published On :9 ஜூலை 2026, 4:52 am IST

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை மாற்றி அமைப்பது தொடா்பான முத்தரப்பு பேச்சு, சென்னை போக்குவரத்துத் துறை ஆணையரகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 9) நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உடனடியாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆட்டோ ஓட்டுநா்கள் முன்வைத்து வருகின்றனா்.

இது தொடா்பாக போக்குவரத்துத் துறை அமைச்சா் மற்றும் போக்குவரத்துத் துறை ஆணையரிடம் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. பல்வேறு கட்ட பேச்சுகளும் நடைபெற்றன. இருப்பினும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையா் அலுவலகத்தில், அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன் தலைமையில் வியாழக்கிழமை முத்தரப்பு பேச்சு வியாழக்கிழமை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த பேச்சில் தொழிற்சங்க பிரதிநிதிகள், பயணியா் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை உயா் அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளனா்.

இதில், தற்போதைய விலைவாசி உயா்வு, எரிபொருள் விலை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உடனடியாக திருத்தி அமைக்க வேண்டும் என்பதையும், ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு கோரிக்கைகளையும் தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் வலியுறுத்த உள்ளதாகத் தெரிகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.