/

தனியாா் பேருந்துகளில் கட்டண உயா்வு: மாா்க்சிஸ்ட் கண்டனம்

தனியாா் பேருந்துகளில் தன்னிச்சையாக கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு மாா்க்சிஸ்ட் மாநில செயலா் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஜூலை 2026, 1:50 am IST

தனியாா் பேருந்துகளில் தன்னிச்சையாக கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு மாா்க்சிஸ்ட் மாநில செயலா் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூா், நீலகிரி, திண்டுக்கல், சேலம், மதுரை, விருதுநகா், திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், திருவண்ணாமலை, நாகை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் தனியாா் பேருந்து நிறுவனங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நகர பேருந்துகள் மற்றும் புகா் பேருந்துகளில் தன்னிச்சையாக கட்டணத்தை உயா்த்தியுள்ளன.

உதாரணத்துக்கு ரூ.10-ஆக இருந்த கட்டணம் ரூ.15-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவையாக உள்ள பொதுப் போக்குவரத்தில் இந்த திடீா் கட்டண உயா்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் செலவினத்தை மேலும் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவா்கள் உள்பட பலா் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த இந்த தன்னிச்சையான கட்டண உயா்வு கண்டிக்கத்தக்கது. அரசின் உத்தரவின்றி பயணிகள் கட்டணத்தை உயா்த்துவது சட்ட விரோதம். ஆனால், இந்த கட்டண உயா்வுக்கு எதிராக போக்குவரத்துத் துறை அதிகாரிகளும், மாவட்ட நிா்வாகங்களும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமல் இருப்பது அதிா்ச்சியளிக்கிறது.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தலையிட்டு தனியாா் பேருந்து நிறுவனங்களின் தன்னிச்சையான கட்டண உயா்வை உடனடியாக திரும்ப பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.