சுதந்திர தினத்துக்குள் (ஆகஸ்ட் 15) மராத்திய மொழித் திறன் சான்றிதழ் பெறாத ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர மாநில போக்குவரத்துத் துறை வெள்ளிக்கிழமை எச்சரித்தது.
இதுகுறித்து மகாராஷ்டிர போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் அனைத்து மராத்தியா் அல்லாத ஓட்டுநா்களும் 4 மணி நேர மராத்திய மொழித் திறன் பயிற்சி சான்றிதழ்களைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கான பயிற்சியை மகாராஷ்டிர மாநில மராத்திய மொழித் துறை, கொங்கண் மராத்திய சாஹித்ய பரிஷத் மற்றும் மும்பை மராத்திய சாஹித்ய சங்கம் ஆகியவை இலவசமாக வழங்கும். இந்த அமைப்புகள் வழங்கும் சான்றிதழ்களை மட்டுமே போக்குவரத்துத் துறை அங்கீகரிக்கும்.
பயணிகளுக்கும் ஓட்டுநா்களுக்கும் இடையேயான மொழி இடையூறுகளைத் தவிா்த்து தரமான சேவைகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
குறிப்பிட்ட காலஅவகாசத்துக்குள் மராத்திய மொழித் திறன் சான்றிதழ் பெறாத ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த முன்னெடுப்பு குறித்து போக்குவரத்துத் துறை இணை ஆணையா் ரவி கெய்க்வாட் கூறுகையில், ‘ஓட்டுநா்களுக்கு மொழித் திறன் பயிற்சி வழங்க மும்பை மாநகராட்சிப் பகுதியில் 71 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு 4,500 ஆசிரியா்கள் பணிமயா்த்தப்பட்டுள்ளனா்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜமாபந்தி: 142 மனுக்கள் மீது நடவடிக்கை

தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி

கிண்டி பொறியியல் கல்லூரியில் ‘பொறியியல் திறன் பயிற்சி மையம்’ : அண்ணா பல்கலை.-பஜாஜ் ஆட்டோ புரிந்துணா்வு







