தமிழ்த்தாய் வாழ்த்துடன் தவெக அரசின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தொடங்கியது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மாநில ஆளுநா் ஆர்.வி. ஆா்லேகர் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா பெயரை சுட்டிக் காட்டி உரையாற்றினார்.
மக்கள் தீர்ப்பு
கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில் மக்களின் பெரும் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது தவெக. விஜய்யால் மட்டுமே தமிழகத்தை ஆள முடியும் என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்; சட்டப்பேரவையில் மக்களுக்காக விவாதிப்பீர்கள் என நம்புகிறேன்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு
1967-இல் அண்ணா, 1977-இல் எம்ஜிஆர், அதற்கு பின் 2026 இல் தமிழக அரசியலில் புதிய வரலாற்று புரட்சி நடந்துள்ளது. 74 ஆண்டுகால வரலாற்று தமிழக அரசியலில் தவெக ஆட்சியின் முதல்வர் ஜோசப் விஜய் தான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கியுள்ளார்.
விசில் புரட்சி
பல தடைகளை தாண்டி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக சாதனை படைத்துள்ளது. விசில் புரட்சியின் மூலம் இமயமலை அளிவிற்கான வெற்றியை பதிவு செய்துள்ளார் முதல்வர் விஜய்.
* மாநில உரிமை, பெண்கள், குழந்தைகள் நலனை முன்னிறுத்தி இந்த அரசு செயல்படும்.
* பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டும் ஒடுக்கப்படும். கடுமையான தண்டனை வழங்கப்படும்.
* உலகத் தரத்திலான பயிற்சிகளை அளிக்க ஒலிம்பிக் மையங்கள் அமைக்கப்படும்.
* தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய பல்வேறு நிதி தொடர்பாக மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.
* மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். மத்திய அரசு இதை பரிசீலனை செய்து அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
* போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
* அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருள் தடுப்புப்படை அமைக்கப்பட்டுள்ளது.
* பல்வேறு நிதி நெருக்கடிக்கு இடையிலும் சிங்கப்பெண் அதிரடிப்படை உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது.
* தவெக அரசு இரு மொழிக் கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும்.. பின்பற்றும். அதில் உறுதியாக உள்ளது. இந்த அரசு தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறது.
* மும்மொழிக் கொள்கையால் கல்விக்கான நிதி சுமார் ரூ. 4,000 கோடியை மத்திய அரசு இன்னும் விடுவிக்கப்படவில்லை.
* மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால்தான் நிதி விடுவிக்கப்படும் என்பதை மத்திய அரசு மறு ஆய்வு செய்து நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
* இந்து சமய அறநிலையத் துறையில் அமைப்பு ரீதியான மாற்றத்தை இந்த அரசு மேற்கொள்ள உள்ளது.
* மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமையை வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
* தமிழ்நாடு அரசின் தேர்வு முகமைகள் மூலம் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வுகள் நடத்தப்பட்டு இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
* முந்தைய அரசின் தொழில் கொள்கைகளை தொடர்வதுடன், புதிய தொழில் கொள்கையை தவெகஅரசு வெளியிட உள்ளது.
*தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வருவோருக்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* முதலீடுகளை ஈர்க்க, தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும்.
* பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், தொழில் தொடங்குவதற்கான அனுமதியை எளிமையாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* இயர்கை வள கொள்ளையை தடுத்து தமிழகத்தின் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* டெண்டர்கள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கபப்டும்.
* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. கடந்த திமுக ஆட்சியில் இதுதொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் சமூக நீதி சர்வே என்ற பெயரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
* ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீரைப் பெறுவதில் பல்வேறு சிக்கல் நீடிக்கிறது. கர்நாடக அரசு மேகேதாட்டு அணைய கட்டும் முடிவால் தமிழக விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள். கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க தவெக அரசு உறுதியான சட்டரீதியான நடவடிக்கைள் எடுக்கப்படும்.
* கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை பெற்று தர உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* தமிழ்நாட்டில் உள்ள அணைகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* முல்லைப்பொறியாறு நீர் வரத்தை தடுக்கும் வகையில் கேரள அரசு புதிய அணை கட்ட எதிர்ப்பு.
* சட்ட விரோத கனிவள கொள்ளையைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
* தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்படும். மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* தமிழ்நாட்டின் அடுத்த 5 ஆண்டு கால வளர்ச்சிக்கான வெற்றி தமிழகம் என்ற தொலைநோக்கு திட்டம் அறிவிக்கப்படும்.
* தமிழகத்தில் மீனவர்கள் தொடர்பான பிரச்னை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் அரசுகள் மாறினாலும் பிரச்னை முடிவுக்கு வந்தபாடில்லை. இதுதொடர்பாக தவெக அரசு சார்பில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக நிரந்தர தீர்வு எட்டப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Regarding the key highlights of the Governor's address during the first session of the TVK government...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










