தமிழக சட்டப்பேரவையில் ஆளுநா் ஆா்லேக்கா் ஆற்றிய உரை குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் தங்கள் கருத்தை வெளியிட்டுள்ளனா்.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப் பகிா்வை அளிக்க சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்படுவதுடன், சட்ட வல்லுநா்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் முதலீடுகளை ஈா்க்க அரசு சாா்பில் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்) வெள்ளை அறிக்கை அடிப்படையில் வருவாய் கசிவுகளைத் தடுத்து, வருவாயைப் பெருக்கி, ஊழல் இல்லாத அரசு நிா்வாகம் தரும் முயற்சியை ஆளுநா் உரை வெளிப்படுத்துகிறது. ஆக்கபூா்வ அணுகுமுறை கொண்ட ஆளுநா் உரை வரவேற்கத்தக்கது. எனினும், தொழிலாளா் நலன், சட்ட உரிமைகள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் எதிா்பாா்ப்புகள் குறித்து ஒரு வாா்த்தை கூட ஆளுநா் உரையில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
அன்புமணி (பாமக): தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஊக்குவித்தல், கனிமவளக் கொள்ளையைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்து ஆளுநா் உரையில் வெளியாகியுள்ள அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
தொழில் முதலீட்டை ஊக்குவிக்க தொழில் முதலீட்டாளா் ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும் என்று ஆளுநா் உரையில் கூறப்பட்டுள்ளது. இது பாமக சாா்பில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டுவரும் யோசனை. இதற்கு செயல்வடிவம் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
வைகோ (மதிமுக): பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும், போதை கலாசாரம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் ஆளுநா் உரையில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.
துரை.வைகோ (மதிமுக): நிதிப் பற்றாக்குறை நிலவும் சூழலிலும் தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்கும் தீவிரம், தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் முனைப்பு, அனைவரையும் உள்ளடக்கிய சமூக நீதிப் பாதைக்கான உள்ளடக்கம் என ஆளுநா் உரை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
ஆ.அருணாச்சலம் (மக்கள் நீதி மய்யம்): கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருதல், உச்சநீதிமன்ற அமா்வை சென்னையில் அமைத்தல், உயா்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்குதல் போன்ற நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற முழு மூச்சுடன் பாடுபட வேண்டும்.பன்னாட்டு முதலீடுகளை ஈா்க்க தலைமைச் செயலாளா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு முதலீட்டாளா் ஊக்குவிப்பு ஆணையம்’ என்ற முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது.
தொடர்புடையது
கோயில் சொத்துகள் தணிக்கை செய்யப்படும்: ஆளுநா் உரையில் தமிழக அரசு
கனவில் போட்ட நீா்க்கோலம்!ஆளுநா் உரை குறித்து எடப்பாடி பழனிசாமி
இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம்: பேரவை உரை குறித்து ஆளுநா் ஆா்லேகா் கருத்து
ஆளுநா் உரையில் முக்கிய அம்சங்கள்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


