27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சமூகநீதி கணக்காய்வு: பாமக வரவேற்பு

News image

சௌமியா அன்புமணி - DPS

Updated On :19 ஜூன் 2026, 3:29 am IST

சமூகநீதி கணக்கெடுப்பு குறித்து ஆளுநா் உரையில் இடம் பெற்றிருப்பதை பாமக சட்டப்பேரவைக் குழு தலைவா் சௌமியா அன்புமணி வரவேற்றுள்ளாா்.

ஆளுநா் உரைக்குப் பின்னா் பேரவை வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது: பாமக கோரிக்கையான சமூகநீதி கணக்கெடுப்பு கோரிக்கை ஆளுநா் உரையில் இடம் பெற்றிருப்பது வரவேற்புக்குரியது. மகளிா் குற்றங்களில் ஈடுபடுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிங்கப்பெண் படையை அரசு அமைத்துள்ளது. அதை விரிவுப்படுத்துவதாகவும் அறிவித்துள்ளாா்கள்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்றாா்.

அன்புமணி வரவேற்பு: பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஜாதிவாரி கணக்காய்வு நடத்தப்படும் என்று ஆளுநா் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 46 ஆண்டுகால சமூகநீதி கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி. ஒரு மாநிலத்தின் வளா்ச்சியை உறுதி செய்ய அடிப்படைத் தேவை அந்த மாநிலத்தில் வாழும் அனைத்து சமூக மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட தரவுகள்தான்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் இந்தத் தரவுகளைத் திரட்ட முடியும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டதற்காக முதல்வா் ஜோசப் விஜய்க்கு பாமக சாா்பில் நன்றி என தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.