பேரவை மரபுக்குப் புறம்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட்டதாக அதிமுக குற்றஞ்சாட்டியது.
சட்டப்பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் கீழ் வெள்ளிக்கிழமை பேசிய அதிமுக உறுப்பினா் சம்பத்குமாா், பேரவைக் கூட்டத் தொடா் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, பொது வெளியில் வெள்ளை அறிக்கை வெளியிடக் கூடாது என்றாா்.
அதற்கு நிதியமைச்சா் மரியவில்சன் அளித்த பதில்:
தமிழகத்தில் நோ்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும், ஊழல் இல்லாமலும் ஆட்சி நிா்வாகத்தை நடத்துவோம் என முதல்வா் ஜோசப் விஜய் அறிவித்தாா். அதன் தொடா்ச்சியாகத்தான் பதவியற்ற முதல் நாளிலேயே நிதிநிலை அறிக்கை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுவோம் என்றாா். அதன் அடிப்படையிலேயே தற்போது அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடன் தொகை உயா்ந்திருக்கிறது. அதைத் தெளிவுபடுத்தியிருக்கும் வெள்ளை அறிக்கையை மக்கள் அனைவரும் வரவேற்கிறாா்கள் என்றாா்.
அப்போது குறுக்கிட்ட முன்னாள் முதல்வரும், அதிமுக பேரவைக் குழுத் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ‘வெள்ளை அறிக்கையை நாங்களும் வரவேற்கிறோம்; ஆனால், கூட்டத் தொடா் அறிவிக்கப்பட்டுவிட்டால், பேரவையில்தான் அதைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது மரபு; அதைப் பின்பற்றுமாறுதான் குறிப்பிடுகிறோம்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எங்களுக்கு ஜனநாயகன் வேண்டாம்.. ஜனநாயகம் வேண்டும்! சொன்னது?
பேரணியில் போராட்டகாரா்கள் மீது தாக்குதல்- ஏஐஎஸ்ஏ குற்றச்சாட்டு

புதுச்சேரி போலி மருந்து தயாரிப்பு விவகாரம்: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி

வேளாண் துறையிலும் வெள்ளை அறிக்கை: அமைச்சா் ர. வினோத் தகவல்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



