ஊத்துக்கோட்டை அருகே தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவினால் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உரிமையாளர் உள்பட 3 பேரை கைது செய்த போலீஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம்,ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேரில் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் கடந்த 21 ஆம் தேதி அன்று அமோனியா வாயு கசிந்து 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் இன்று காலையோடு உயிரிழந்த வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
தொழிற்சாலையில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெரியபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து இறால் தொழிற்சாலையின் உரிமையாளர்களான சென்னையைச் சேர்ந்த மோகன் (59), ஜோசப் ஜெகன் (48), மேலாளர் டேனியல் (68) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.
இந்த நிலையில், இன்று உரிமையாளர் உள்பட 3 பேரையும் போலீஸார் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தினர். அதைத் தொடர்ந்து விசாரணைக்குப் பின் 3 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
அமோனியா கசிவு உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Ammonia leak case – Three arrested individuals, including the factory owner, lodged in prison!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமோனியா வாயு கசிவு விபத்து: 3 பேர் கைது

அமோனியா கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை!

அமோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர உத்தரவு!

திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |





