தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையில் முதல்வர் விஜய் சுமார் 45 நிமிடங்கள் பேசினார்.
முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 18 ஆம் தேதி (வியாழக்கிழமை) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது ஜூன் 19, 22 ஆகிய இரு நாள்கள் விவாதம் நடைபெற்றது.
பின்னர், இன்று பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் விஜய் பதிலளித்துப் பேசினார்.
ஆட்சியமைத்து 40 நாள்களில் தவெக அரசு செய்தவற்றைப் பட்டியலிட்ட முதல்வர் விஜய், பின்னர் தவெக அரசின் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்தார்.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு, மின் வெட்டு, போதைப்பொருள் புழக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அனைத்திற்கும் கடந்த திமுக அரசுதான் காரணம் என்றும் 10 மாதங்களாக தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை, தவெக அரசு தான் டிஜிபியை நியமித்தது என்றும் திமுக அரசை முதல்வர் கடுமையாக விமர்சித்தார்.
அரை மணி நேரம் தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், பின்னர், 'டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் வசூலித்தனர்' என்று கூறியதும் திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் பேச, பிற அமைச்சர்கள், அவருக்கு பதிலளிக்கும் விதமாக பேசினர். இது சுமார் ஒரு 15 நிமிடங்கள் நடந்தது.
அதன்பின்னர் மீண்டும் பேசிய முதல்வர் விஜய் அடுத்த 15 நிமிடங்களில் தனது உரையை நிறைவு செய்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
Summary
CM joseph vijay speech in TN assembly to reply for thanking governor address
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
சட்டம் - ஒழுங்கு: ஆரம்பத்திலேயே தடுக்காதது ஏன்? 11 மாதங்களாக டிஜிபியே இல்லை! விஜய்
நடிகராக இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை! 1990 முதல் மக்கள் பணி! விஜய் பேச்சு

பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!
விடியோக்கள்

வெளியானது இதயம் முரளி ஸ்னீக் பீக்!

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK



