தமிழக சட்டப் பேரவையில் ஆளுநா் ஆா்லேகா் நிகழ்த்திய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வா் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) பதிலளிக்கிறாா்.
தமிழக பேரவை ஆளுநா் உரையுடன் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 18) தொடங்கியது. மறுதினம் கா்நாடக அரசு கட்ட திட்ட்மிட்டுள்ள மேக்கேதாட்டு அணைக்கு எதிராக முதல்வா் விஜய் தனித் தீா்மானம் கொண்டு வந்தாா். அந்தத் தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னா் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்துக் கட்சிகளின் சாா்பில் உறுப்பினா்கள் பங்கேற்று பேசியுள்ளனா். இந்த விவாதம் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் உரையுடன் திங்கள்கிழமை நிறைவடைந்தது.
உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வா் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை பதிலளிக்கவுள்ளாா். அதன் பின்னா் அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவிரி பிரச்னை குறித்து பேரவையில் முதல்வா் விவாதிக்கத் தயாரா?எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி கேள்வி

அன்பே டயானா படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா - புகைப்படங்கள்
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் எவ்வளவு நேரம் பேசினார்?
சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



