பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

கத்தார் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் பலி!

கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

News image

வெடிவிபத்தில் தீப்பற்றி எரியும் எரிவாயு ஆலை

Updated On :23 ஜூன் 2026, 8:56 am IST

கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

கத்தாரின் முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையமான ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டையில் உள்ள பர்சான் எரிவாயு விநியோக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட வெடிவிபத்தில் சிக்கி இந்தியர்கள் உள்பட 13 பேர் பலியாகினர். 66 பேர் காயமடைந்தனர்.

ஈரான் போரின்போது கடந்த மார்ச்சில் இந்த எரிவாயு ஆலை ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி, சேதமடைந்தது. இதையடுத்து, இந்த ஆலையின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி திரும்பி வரும் சூழலில், ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் தணிந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, எரிவாயு ஆலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டன. அப்போது எதிா்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தால் ஆலை முழுவதும் தீப்பற்றியது.

இதில் உயிரிழந்த 13 பேரும் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலாளா்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 66 பேரில் இந்தியா, கத்தார், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், கென்யா, நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அடங்குவர்.

இந்த நிலையில், கத்தார் இயற்கை எரிவாயு ஆலை விபத்தில் பலியான 13 பேரில் 12 பேர் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனவும் அதில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லை ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த பவித், பணகுடியைச் சேர்ந்த சுஜித்குமார், கவின் ஆகியோர் உயிரிழந்ததாகத் தகவல் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் பலியான தொழிலாளர்களின் இறப்புக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Summary

Three of the people who died in the explosion at the Qatar gas plant were from Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.