தமிழகத்தில் பசுமை எரிசக்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து புதிய கூட்டு நிறுவனம் ஒன்றை அமைக்கவுள்ளதாக என்எல்சி இந்தியா செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
சுரங்கம் மற்றும் மின் உற்பத்தித் துறையில் முன்னிலையில் உள்ள என்எல்சி நிறுவனம், தற்போது புதுப்பிக்கத்தக்க மற்றும் பசுமை எரிசக்தித் துறைகளிலும் தனது செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.
அந்தவகையில், தமிழகத்தில் சூரிய ஒளி, காற்றாலை, ‘ஹைப்ரிட்’ மின்சாரம், பேட்டரி மற்றும் நீரேற்று மின் சேமிப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்காக இப்புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
மேலும், தமிழகத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உள்ள பிற தொழில் வாய்ப்புகளையும் இந்த ஒப்பந்தத்தின்மூலம் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத்துடனான இக்கூட்டணி, தூய்மை மற்றும் நீடித்த எரிசக்தித் துறையில் ‘நவரத்னா’ அந்தஸ்து பெற்ற எங்கள் நிறுவனத்தின் விரிவாக்கத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்று என்எல்சி நிறுவனத் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் திட்டம்: என்எல்சி, இந்தியன் ஆயில் நிறுவனங்கள் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை விரைவுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்

பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின்கொள்முதலை குறைக்கலாம்: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



